வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ

Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Rakesh Jun 05, 2026 05:08 PM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று மக்கள் போராட்ட முன்னணி வன்மையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசின் இந்த இரட்டை வேட அரசியலும், இனவாதத்தைக் கிளறிவிட்டு அரசியல் இலாபம் தேடும் சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகப் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடியாக கருத முடியாது

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடியாக கருத முடியாது

14 நாள்கள் விளக்கமறியல் 

ஆனால், தற்போது புதிய சட்டம் வரும் வரை அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத் தொடங்கியுள்ளனர்.

வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ | Prevention Terrorism Act Applied Despite Promise

இதற்கமைய, இளம் கலைஞர் ஒரு பாடலைப் பாடியமைக்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஒரு கலைஞனைத் தண்டிப்பதற்கான போலியான முத்திரையாகும்.

தேர்தல் பிரசாரங்களின் போது, ஈழம் குறித்துப் பேசியவர்களால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததென்றால், இன்று ஒரு கலைஞர் பாடும்போது அது பயங்கரவாதமாக மாறுவது ஏன்? இதுவே இந்த அரசாங்கத்தின் தார்மீகமற்ற இரட்டை வேடமாகும்." - என்று சாடினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெசாக் கூடு உடைப்புச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், "இந்தச் சம்பவம் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து செய்த காரியமல்ல. சில இனவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகும். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மீண்டும் ஒரு 'கறுப்பு ஜூலையை' உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடச் சிலர் துடிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் சங்கமே இந்தப் பழிசொற்களைப் பகிரங்கமாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ | Prevention Terrorism Act Applied Despite Promise

கடந்த காலங்களில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தைப் போலவே, இன்றும் வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்குப் பலியாக வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விவகாரங்களில் புலனாய்வுத் துறையினரின் பங்கு குறித்து இன்று பேசுபொருளாகியுள்ள நிலையில், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அரசு இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதான தரப்பினர் ஒருவித இரகசியப் புரிதலுடன் செயற்படுவதால், மத்திய வங்கி மோசடி அல்லது ஏனைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றில் எவரும் பேசுவதில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. மக்கள் போராட்டத்தின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றவும், இனவாதத்தை நிராகரிக்கும் உண்மையான மக்கள் சார் எதிர்க்கட்சியை உருவாக்கவும் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை" என்றார்.

போலி தங்க நகைகளை மனைவிடம் கொடுத்து மோசடி செய்தவர் கைது..! 9 மாதங்களாக பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டை

போலி தங்க நகைகளை மனைவிடம் கொடுத்து மோசடி செய்தவர் கைது..! 9 மாதங்களாக பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டை

குவைத் விமான நிலையத்தை இலக்குவைத்து சரமாரி தாக்குதல் - இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குவைத் விமான நிலையத்தை இலக்குவைத்து சரமாரி தாக்குதல் - இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US