ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடியாக கருத முடியாது
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதார நெருக்கடியாக கருதப்பட முடியாது பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை நாட்டின் பொருளாதாரச் சரிவாக பார்க்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் பதற்றத்தினால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பாதக நிலையை சரி செய்ய உரிய கொள்கை அடிப்படையிலான தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி குறித:து பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.