திருகோணமலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கி வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய ஜனாதிபதி நிதியத்தினால் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (19) திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட திறமை
இதன்போது ஜனாதிபதியின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை, மூதூர், கிண்ணியா, திருகோணமலை வடக்கு போன்ற கல்வி வலயங்களுக்கு புலமைப்பரிசில்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வி நடவடிக்கைகளில் விசேட திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்காக இவ் கல்வி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கியக்கியதாக தரம் 01 முதல் தரம் 13 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண ஆளுநரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள , திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா , கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
