ஜனாதிபதி தேர்தல் காலம் தாழ்த்தப்படாது: ருவான் விஜேவர்தன
ஜனாதிபதித் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணையில் தேர்தலை காலம் தாழ்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்
ரணில் விக்ரமசிங்க அரசியல் சாசனத்தை மதிக்கும் ஒர் அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri