ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார்.
தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரணில் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவீர்கள் என்பதில் எந்தளவு நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள் என்று இந்திய ஊடகம் ஒன்று ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள்
இதற்கு பதிலளித்த ரணில், நான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமானால் முதலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை மையப்படுத்தியே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற கருத்தை உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri