சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம்
தேசபந்து தென்னகோனை புதிய பொலிஸ்மா அதிபராக கடந்த திங்கட்கிழமை அரசாங்கம் நியமித்தது குறிப்பிடத்தக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக பொலிஸ்மா அதிபராக இருந்த அவரது பதவிக்காலம் கடந்த புதன்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில்,அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபராக அவர் உறுதிசெய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் கடந்த செவ்வாய்கிழமையன்று, தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்க இருந்தது.
பொலிஸ்மா அதிபராக நியமனம்
இது தொடர்பான ஏழு மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றில் ஒன்றில், பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று. அவருக்கு ஆதரவாக தலையிடும் மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான சாத்தியமான எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கவே விரைவாக பொலிஸ்மா அதிபராக நியமனம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இந்த நியமனம் அரசாங்கத் தலைவர்களுக்கு மிகத் தெளிவாகப் பெரும் பின்னடைவாகவே இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தென்னக்கோனுக்கு எதிரான விமர்சனங்களை நிராகரித்து, அவரை வலுவாக ஆதரித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ_க்கு அவரின் நியமனம் தனிப்பட்ட வெற்றியாகும்.
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு
அவரது வயதைப் பொறுத்தவரை, தென்னகோன் 2031 வரை தமது பதவியில் நீடிக்கலாம். அதாவது புதிய ஜனாதிபதியின் முழுப் பதவிக்காலத்தையும், அதற்குப் பின்னர் இன்னும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அவர் தகுதியானவர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு சபையில் தனது வாக்கை தென்னக்கோனின் நியமனத்துக்கு எவ்வாறு வழங்கினார் என்பதை இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினவியுள்ளார்.
அத்துடன் சபாநாயகர் அபேவர்தனவின் நடவடிக்கைகளுக்கு தனது எதிர்ப்பை அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்த நியமனத்தை அடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொலிஸாரை தயார்படுத்துவதே தென்னக்கோனின் பிரதான கடமைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |