ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும்! சிசிர ஜயகொடி
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என உள்நாட்டு மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது எனவும், நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஹலியகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை எனவும், ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது எனவம் அவர் தெரிவித்துள்ளார்.
முடிந்தளவு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என அவர் குிறப்பிட்டுள்ளார்.
முதலில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
