நூற்றுக்கணக்கான மக்களுடன் உடைந்து விழுந்த பாலம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
மாத்தறையில் கடற்கரை பூங்காவை அண்மித்துள்ள பாலம் உடைந்து விபத்துக்குள்ளானமையை தொடர்ந்து புதிய பாலமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாத்தறையில் அமைந்துள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் நேற்று உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நூற்றுக்கணக்கான மக்கள் விகாரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பாலம் உடைந்து விழுந்தது.
எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலத்தை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் இன்று நேரில் வருகை விஜயம் செய்யவுள்ளனர்.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
