ஆசி பெற தந்தையோடு இணைந்து அனுராதபுரம் சென்றார் நாமல்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதிக்கு சென்று ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், தனது தந்தையுமான மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து இன்றையதினம் அனுராதபுரத்திற்கு நாமல் ராஜபக்ச சென்று ஆசீரைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர்..
இதன்போது, ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக நாமல் ராஜபக்ச களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்றையதினம் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்கு முன்னர் வேட்பு மனுவில் நாமல் ராஜபக்ச கையெழுத்திடும் போது, அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri