ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு அதிர்ச்சி
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமை இரத்து
ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு அண்மையில் கூடியது.

கட்சியில் இருந்து ஒருவரை வேட்பாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
கடும் அழுத்தம்
எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில வாரங்களாக அக்கட்சியின் அரசியல் சபைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஸ
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan