செம்மணி போராட்ட களத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம்(22.07.2026) செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு வருகை தந்தனர்.
இதன்போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த படங்கள் தாங்கிய பதாகைகளை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் பதிவுசெய்யும்போது அதனை மறைக்கும் வகையில் பொலிஸார் குறுக்கே நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கூறிய நிலையில்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களது படங்களை தாங்கிய பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவற்றை மறைக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு கூறிய நிலையிலும் அவர்கள் அங்கிருந்து நகராமல் நின்றதால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸார் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


