தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கம்: அமெரிக்க தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்
ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படும் சப்தம் கேட்டதாக அல் ஜசீரா நிருபர் ரசூல் செர்டார் அடாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நேற்றிரவு எந்தவிதத் தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், வெடிசப்தங்கள் எதுவும் கேட்கவில்லை என்றும் அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான பிறகு, தலைநகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
தாக்குதல்
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தெஹ்ரானுக்கு மிக அருகில் உள்ள பகுதியாக, சுமார் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள செம்னான் நகரம் இருந்ததுடன், கடந்த வாரம் ஒரு சிவிலியன் விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.

எனினும், தலைநகர் தெஹ்ரானை இலக்கு வைத்து இதுவரை எந்தவொரு நேரடித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.