எமக்கு சவாலானவர்கள் எவரும் இல்லை: பெரமுன வேட்பாளர் நாமல் இடித்துரைப்பு
கொள்கைகளை தவறாக முன்னிலைப்படுத்தி செயற்படுபவர்கள் எவரும் எமக்கு சவாலானவர்கள் அல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நிச்சயம் வெற்றிப் பெறுவோம்
“தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.
வெற்றிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள்.
ஆகவே எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
