அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார இன்று விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
இன்று(22.05.2026) காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நிகழ்விற்கும் செல்ல அனுமதி மறுப்பு
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
எனினும் இந்நிகழ்விற்கு தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தகவல் திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.



