அமெரிக்கா நோக்கிப் பயணமாகும் அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22.09.2025) அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80ஆவது அமர்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச் சபையில்
ஜனாதிபதி புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் செல்ல உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




