“கைக்குண்டு“ விடயத்தில் தலையிடுங்கள்! ஜனாதிபதியிடம் கோரும் முக்கிய அரசியல் கட்சி! (Photo)
கொழும்பு பொரல்லை தேவாலயத்தில் வைக்கப்பட்ட கைக்குண்டு விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு உரிய விசாரணையை உறுதிச்செய்யவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.
கட்சியின் உதவி தலைவர் ருவன் விஜேவர்த்தன இதனை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் விளையாட்டுக்கள், இலங்கையின் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும்.
எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையீட்டை மேற்கொள்ளவேண்டும் என்று ருவன் விஜேவர்த்தன பியகமயில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
மத நல்லிணக்கத்தைப் பேசி அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற முயலும் சூழ்ச்சியாளர்கள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தலையிட வேண்டும் என்றும் விஜேவர்தன வலியுத்தினார்.
அமைச்சர் மின்சார விநியோகத்தடை இல்லையென்று கூறினாலும், மின்சார சபை தடைகளை மேற்கொள்கிறது.
இந்தநிலையில் கடன் வாங்குவதை விட, டொலர்களை தேடும் வழிகளை அரசாங்கம் ஆராயவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உதவி தலைவர் ருவன் விஜேவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam