தமிழர் மனதை வெல்ல ஜனாதிபதி அரங்கேற்றும் நாடகம்! சஜித் அணி பகிரங்க தகவல்
“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்பட வேண்டும்” எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை,நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது. இதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam