நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த தேசமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு அவர் விடுத்துள்ள புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிமையான வாழ்க்கை முறை
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக ஈதுல் பித்ர் பெருநாள் அமைகின்றது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியத்தைப் பிரதிபலிக்கின்றது.

மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் பிறரை அரவணைக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும்.
ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற சூழல் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
பேதங்களை மறந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கான இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து, அதற்குத் தேவையான பலமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri