ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Anura Kumara Dissanayaka Ministry of Health Sri Lanka Nalinda Jayatissa Budget 2026
By Rakesh Jul 10, 2026 05:42 AM GMT
Report

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்

 

ஆரோக்கிய நல்வாழ்வு சேவை மையங்கள்

ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக 'ஆரோக்கிய நல்வாழ்வு சேவை மையங்களை' அமைக்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல் | President S Important Instruction Health Service

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவினாலும் 2026 வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது தனித்தனியாக ஆராயப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக, விஞ்ஞான அடிப்படையிலான மூலோபாய முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

மேலும், வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய தொழில்நுட்ப மாற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வசதிகளை நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் பெறக்கூடிய வகையில் நிறுவுவதன் மூலம், சுகாதார சேவையின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம், அரச வைத்தியசாலைக் கட்டமைப்பு மூலம் மக்கள் செயற்திறனான மற்றும் தரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தனியார் துறையினரிடம் சுகாதார சேவைகளைப் பெறும்போது ஏற்படும் அதிக நிதிச் சுமையைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

சுவசெரிய சேவையை வலுப்படுத்தல்

சுவசெரிய சேவையை வலுப்படுத்துவதுடன், வைத்தியசாலைகளுக்கான அம்பியூலன்ஸ்களைப் பெற்றுக்கொள்ளும்போது, பாரம்பரிய வேன் ரக வாகனங்களுக்குப் பதிலாக, சர்வதேச தரத்திற்கு இணங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன்ஸ்களை மாத்திரம் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கடந்த அரசாங்கங்களினால் மூலதனச் செலவுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக தடைப்பட்டிருந்த மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் ஐந்து மாடிக் கட்டடத் தொகுதி, திருகோணமலை, அம்பாறை, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உட்பட சுகாதாரத் துறையின் 26 பாரிய நிர்மாணத் திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் சேர்த்து தற்போது 48 நிர்மாணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவம் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல் | President S Important Instruction Health Service

வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, மருந்து கொள்வனவு தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும், மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக சுகாதார அமைச்சின் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், UNDP, UNICEF போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் கீழ், Patient Health App), Tele-medicine மற்றும் நோயாளிகளின் அறிக்கைகளை எந்தவொரு வைத்தியசாலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த வலையமைப்பை நிறுவுவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

சுகாதார சேவையில் முறையான பணியாளர் மீளாய்வை மேற்கொள்வதற்கும், அதனை முன்னெடுக்கும்போது புதிய வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும், சுகாதாரப் பணியாளர்களைப் புதிதாகப் பணியமர்த்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பௌதீக வள முன்னேற்றம்

அரச திரைப்படப் பிரிவிற்கு பௌதீக வளங்களை வழங்குதல், ஊடகவியலாளர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்கங்களை உருவாக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய விசேட ஊடகச் செயல்பாட்டு அறையொன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தற்போதுள்ள பழைய நடைமுறைகளிலிருந்து விடுபட்டு, தபால் திணைக்களம் மற்றும் அரசாங்க அச்சுத் திணைக்களம் ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார். 

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US