நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரால் தற்போது நடத்தப்பட்டு வரும் அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுமாறு நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக அடையளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அனுமதியின்றி எந்தவொரு துரும்பையும் இடமாற்றவோ, மாற்றங்கள் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடைய ஏற்பட் மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan