போராட்டக்களத்திலுள்ள இளைஞர், யுவதிகள் குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் தான் எதிர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், காலிமுகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி குறித்த விடயத்தை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதார போராட்டம்
இதன்போது நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றி பெறுவதற்கு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
இந்தநிலையில் ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் நான் எதிர்க்கின்றேன். வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்க வேண்டும்.
அந்த குழுவில் அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் தொடர் எச்சரிக்கைக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பு |
போராட்டக் குழுவினரின் கோரிக்கை
இதேவேளை, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவினரையும், செயற்பாட்டாளர்களையும் சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போராட்டக் குழுவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
