பொலிஸாரின் தொடர் எச்சரிக்கைக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் இந்த சந்திப்பில் ஆர்ப்பாட்டங்களின் முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

பொலிஸாரின் தொடர் எச்சரிக்கை
இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்கள பகுதிக்கு நேற்றைய தினமும் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
இதேவேளை மீண்டும் இன்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| காலிமுகத்திடல் பகுதிக்கு வந்து மீண்டும் விசேட அறிவிப்பை வழங்கிய பொலிஸார் |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri