நடுவானில் திடீரென தடுமாறிய விமானம்! 5 பேருக்கு நேர்ந்த விபரீதம் - உலக செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தடுமாறியதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியது. இதனால் பீதியடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
விமானம் தடுமாறியதில் 2 பயணிகள், 3 விமான பணியாளர்கள் என 5 பேர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
