சிக்கல் இருந்தாலும் புதிய ஜனாதிபதியாகும் முக்கியஸ்தர்
இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பிரதான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் களம் காண்கின்றனர்.
இந்தநிலையில், அண்மைய சில நாட்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து அவரோடு இணைந்துகொள்ளும் எதிர்த்தரப்பினரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி ரணிலுக்கு, சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதரவு மிகவும் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என்று அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
மேலும், சஜித் மற்றும் ரணிலுக்கு இடையிலேயே போட்டித் தன்மை அதிகமாக காணப்படும் என்றும், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அதில் வெல்வதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |