ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் மகிந்த! இடையில் மாற்றப்பட்ட முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்தார். இருப்பினும் ஒரு தரப்பினர் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது பொதுஜன பெரமுன கட்சி பிளவடைந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்தான் ஏற்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைக் களமிறக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்தார். இருப்பினும் ஒரு தரப்பினர் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் யோசனை ஏதும் முன்வைக்கப்படவில்லை. மாறாக உதயங்க வீரதுங்கவின் யோசனை முன்வைக்கப்பட்டு, முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்று சபையில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவும் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகப் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
கட்சி பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை இவர் ஏற்க வேண்டும். 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவரது முறையற்ற செயற்பாடுகளினால் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிரேஷ்ட தரப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வேண்டுமாயின் சாகர காரியவசத்தை பதவி நீக்க வேண்டும்.அமைச்சர் ரமேஷ் பதிரனவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan