மகிந்த கட்சியில் இருந்து வெளியேறிய 92 நாடளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான பெயர் விபரம்
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மொட்டு உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கொழும்பு - தினேஸ் குனவர்தன, பிரதீப் உடுகொட, ஜகத் குமார, பிரேம்நாத் சி தொலவத்த, மதுர விதானகே
கம்பஹா - நளின் பெர்னாண்டோ, சிசிர ஜயக்கொடி, நிமல் லன்சா, கோகிலா குணவர்தன, மிலன் ஜயதிலக, உபுல் மகேந்திர ராஜபக்ச, சஹான் பிரதீப்
களுத்துறை - விதுர விக்கிரமநாயக்க, பியல் நிஷாந்த
கண்டி - திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, மகிந்தானந்த அளுத்கமகே, குணதிலக ராஜபக்ச
மாத்தளை - பிரமித பண்டார தென்னகோன், ஜனக பண்டார தென்னகோன், ரோஹன திஸாநாயக்க
நுவரெலியா - எம்.ராமேஸ்வரன், எஸ்.பி.திஸாநாயக்க, ஜீவன் தொண்டமான்
காலி - சம்பத் அத்துகோரல, மனுஷ நாணயக்கார, கீதா குமாரசிங்க, ரமேஷ் பத்திரன, மொஹான் பி டி சில்வா
மாத்தறை - காஞ்சன விஜேசேகர
ஹம்பாந்தோட்டை - மகிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச
யாழ்ப்பாணம் - டக்ளஸ் தேவானந்தா
வவுனியா - குலசிங்கம் திலீபன், தர்மஸ்தான்
மட்டக்களப்பு - சிவநேசத்துரை சந்திரகாந்தன், வியாளேந்திரன்
அம்பாறை - அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம்.முஷாரப்
திருகோணமலை - கபில அத்துகோரல
குருநாகல் - டி.பி ஹேரத், சாந்த பண்டார, அனுர பிரியதர்ஷன யாப்பா
புத்தளம் - பிரியங்கர ஜயரத்ன, அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன
அநுராதபுரம் - இஷாக் ரஹ்மான், எஸ்.எம்.சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, துமிந்த திசாநாயக்க, எஸ்.சி.முதுகுமாரன
பொலன்னறுவை - ஜகத் சமரவிக்ரம
பதுளை - சுதர்சன தெனிபிட்டிய, அரவிந்த் குமார், நிமல் சிறிபால
மொனராகலை - கயாஷான் நவநந்த, விஜித பேருகொட, குமாரசிறி ரத்நாயக்க, ஜகத் புஷ்பகுமார
இரத்தினபுரி - ஜோன் செனவிரத்ன, முதித சொய்சா, அகில எல்லாவல, ஜானக வக்கும்புர
கேகாலை - சுதத் மஞ்சுள, தாரக பாலசூரிய, கனக ஹேரத், ராஜிகா விக்கிரமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, உதயகாந்த குணதிலக்க
தேசிய பட்டியல் - வஜிர அபேவர்தன, மஞ்சுளா திஸாநாயக்க, யதாமினி குணவர்தன, சீதா அரம்பேபொல, ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன், ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், எம்.யு.எம். அலி சப்ரி
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கப் போவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
ரணிலுக்கு வெற்றி..
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் ஒன்றுபட்டு பணியாற்றப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த 92 பேரும் மகிந்த தரப்பு ஆதரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட பலர் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று முதல் நாள் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |