மகிந்த தரப்பு வேட்பாளர்! குடும்பத்தின் தீர்மானம் தொடர்பில் விமர்சிக்கும் மொட்டு கட்சியினர்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முடிவு குடும்பத்திற்குள் எடுத்த தீர்மானம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுன தமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்க எடுத்த தீர்மானம் கட்சியின் நிறைவேற்று குழுவில் எடுத்ததல்ல.
தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை..
குடும்பத்திற்குள் எடுத்த தீர்மானமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை.
எமது ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குதான். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு ஜனநாயக ரீதியில் செயற்படவில்லை, நிறைவேற்றுக் குழு ஒரு நாடகமே என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
