இந்தியாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்! விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய 'நிபா' (Nipah) வைரஸ் பாதிப்பு காரணமாக, அண்டை நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் விமான நிலையக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய ஐந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பு
இதில் ஒரு தாதியரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 110 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு (Quarantine) கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்திலிருந்து விமானங்கள் வருகை தரும் பேங்காக் மற்றும் புக்கெட் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்குச் சுகாதாரப் பரிசோதனைகளைத் தாய்லாந்து தொடங்கியுள்ளது.
பயணிகள் தங்கள் உடல்நிலை குறித்த உறுதிமொழியை (Health declaration) வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடுகளின் விமான நிலையங்கள்
காத்மாண்டு விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான நில எல்லைப் பகுதிகளில் நேபாள அரசு தீவிரக் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது.

நிபா வைரஸை 'வகை 5' (Category 5) எனும் மிக முக்கியமான பொதுச்சுகாதார அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கத் தைவான் முடிவு செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள மிகவும் அபாயகரமான 10 நோய்களின் பட்டியலில் நிபா வைரஸும் அடங்கும். இது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
பல உயிரிழப்புகள்
பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்தும் மற்றவர்களுக்குப் பரவும். காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகள். தீவிரமான நிலையில் மூளை வீக்கம் (Encephalitis) ஏற்பட்டு உயிரிழப்பு நிகழலாம்.

இந்த வைரஸிற்கு எதிராக இதுவரை தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேற்கு வங்கத்தில் இது மீண்டும் தலைதூக்கியுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam