கல்வித் துறையில் ஏற்படபோகும் மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி, தம்புள்ளை ரஜமகா விகாரையில், இன்று(25) பிற்பகல் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை
அத்தோடு, நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கங்களுடன் கூடிய எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |