சைபர் போர் களத்தில் பாகிஸ்தான்! இந்தியாவுக்கு அடுத்த அடி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சைபர் தாக்குதல் குழுவான “டீம் இன்சேன் பிகே” அமைப்பானது இந்திய இராணுவ தாதியர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
வலைத்தள செய்தி
“எங்கள் மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மைல்கள் தொலைவில் உள்ளன. அது எங்களை பலப்படுத்துகிறது.
இரு தேசக் கோட்பாடு வெறும் யோசனை அல்ல. உங்கள் மதம் உங்களைக் காப்பாற்றாது.
ஆனால் அது உங்கள் மரணத்திற்குக் காரணமாக இருக்கும்
. நாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள்.”, என்று வலைத்தளத்தில் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிந்து நதி திட்டம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல், பாகிஸ்தான் விசாக்களை இரத்து செய்தல், மற்றும் புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு 72 மணிநேரம் வெளியேற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹேக்கர்கள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளத்தில் ஒரு ஆத்திரமூட்டும் செய்தியை விட்டுச் சென்றதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில் சைபர் தாக்குதலை சமாளிக்க இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவை (CERT-In) அணுக வேண்டும் என்றும் இராணுவ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |