பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்!

Narendra Modi Pakistan India Israel
By Dharu Apr 25, 2025 11:03 AM GMT
Report

சர்வதேசத்தின் கவனத்தையும் கண்டனத்தையும் பெற்றுள்ள பஹல்காம் தாக்குதலின் பின்னணியானது இந்திய புலனாய்வாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது.

இதன் பின்புலத்தில் தாக்குதல்தாரிகளுக்கு பஹல்காமில் தங்கியிருந்த 7 புலனாய்வாளர்கள் தொடர்பான தகவல் கிடைத்திருக்கக் கூடும் எனவும் , இதனை இலக்கு வைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் சிறிய சுவிசர்லாந்து என வர்ணிக்கப்படும் இந்தியவின் முக்கிய சுற்றுலா மையமான பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலின் எதிரொலியானது சர்வதேசத்தின் குரல்களை மேலோங்கச் செய்துள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஸ்கரி தோய்பா அமைப்பை சேர்ந்த தாக்குதல்தாரிகளால் பல்வேறு இந்தியர்கள் இலக்கு வைக்கப்பட்டு இதன்போது கொல்லப்பட்டனர்.

குறித்த தாக்குதலுக்கு லஸ்கரி தோய்பா என்ற அமைப்பு பொறுபேற்றுள்ளமையானது, இந்த தாக்குதலை பாகிஸ்தானின் அமைப்பொன்று செய்துள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளது.  

இந்தியாவுடன் முழுமையான போர்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடன் முழுமையான போர்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் - பஹல்காம்

ஜம்மு-காஷ்மீர் -  பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் திகதியன்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் உயிரிழந்த பலரும் சுற்றுலாப் பயணிகளே.

இந்த தாக்குதலானது இந்துக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக பரபரப்பு குற்றச்சட்டுக்களை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

தாக்குதலை மேற்கொண்ட அமைப்பானது இலக்கு வைக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக அவர்களினுடைய அடையாள அட்டையை பகிரங்கமாக பெற்று பரிசோதித்துள்ளதாகவும், பின்னர் உறுதி செய்யப்படாத நிலையில், ஆண்களின் உடைகளை அவிழ்க்கச் செய்து அதன் மூலம் பிறப்புறுப்பின் அடையாளங்களில் அவர்கள் இந்துக்களா, அல்லது இஸ்லாமியர்களா என ஆராய்ந்து கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குற்றம் கூறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டானது பாதிக்கப்பட்ட மற்றும் உறவுகளை இழந்த தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை மேற்கோள்காட்டுகிறது.

லஸ்கரி தோய்பா என்ற அமைப்பானது TRF என்ற பெயரின் மூலம் தமது தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்திய இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் மத சார்புடையவர்கள் அல்ல என்பதை வெளி உலகுக்கு காட்டுவதற்கான ஒரு நகர்வு என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

எனினும் தற்போது இடம்பெற்ற தாக்குதல் பின்புலத்தை ஆராயும்போது இந்த தாக்குதலானது மத ரீதியான பழிவாங்கல் என்று இந்திய பாதுகாப்பு தரப்புக்கள் விளக்கமளித்துள்ளன.

இந்தியா வெளியிட்ட அறிக்கைகளின்  அடிப்படையில், லஸ்கரி தோய்பா அமைப்பானது தாக்குதலை மேற்கொள்ளும் முன்னர், குறித்த பகுதியில் 2000 பேர் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம்

பொலிஸாரின் சீருடை

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இந்த காலப்பகுதியானது இந்தியாவில் பாடசாலை விடுமுறை நாட்களாகவும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் விஜயங்கள் அதிகமாக காணப்படும் நாட்களாகவும் காணப்படுவதாக அறிய முடிகிறது.

இந்தியாவில் தற்போது வெப்பசூழ்நிலை அதிகரித்துள்ள பின்னணியில், உள்நாட்டு சுற்றுலா பயணங்கள் பெரும்பாலும் மலை பிரதேசங்களை நோக்கியதாக காணப்படும்.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

இதன்படி பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், முதலில் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரிகளில் 4 பேர் இந்திய பொலிஸாரின் சீருடைகளை அணித்திருந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பெண்ணொருவர் வெளிப்படுத்துகின்றார்.

அவர்களது கைகளில் AK 47 ரக துப்பாக்கிகளை ஏந்தி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் ஆரம்பத்தில் முதலில் காட்டுப்பகுதிகளில் இருந்து துப்பாக்கி சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது.

எனினும் பொதுமக்கள் முதலில் இதனை இராணுவ பயிற்சி என நினைத்து பொருட்படுத்தாத நிலையில் இருந்துள்ளனர்.

அதன்பின்னர் துப்பாக்கிச்சூடுகளில் பாதிக்கப்பட்டு சிலர் கீழே விழுந்துள்ளனர். இதனை அறிந்த மக்கள் உடனடியாக உயிரை காப்பாற்றிக்கொள்ள பதறி ஓடியுள்ளனர்.

இதன்போது தாக்குதல்தாரிகள் சுற்றுலாத்தலத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு கூடாரத்தினை நோக்கி நகர்ந்து சென்றதாகவும், அதன் பின்னர் அதில் இருந்த ஆண்களை அழைத்து மேற்கூறிய வகையில் அடையாளங்களை உறுதி செய்து படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இவற்றை அங்கிருந்த கண்ணால் கண்டதாக கூறும் சாட்சிகள் வெளிப்படுத்தியதாக இந்திய ஊடகங்களும், அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புக்களும் சுட்டிக்காட்டுகின்றன.

இஸ்ரேல் பாணியில் பதிலடிக்குத் தயாராகும் இந்தியா

இஸ்ரேல் பாணியில் பதிலடிக்குத் தயாராகும் இந்தியா

அடையாளப்படுத்திய துப்பாக்கிச்சூடு

மேலும் குறித்த தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண்ணொருவர் கூறுகையில், தாக்குதல்தாரிகள் எனது கணவரை இந்துவா என அடையாளப்படுத்திய பிறகே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் பஹல்காமில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

இதுவரை இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவலின்படி 27 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை இடைநிறுத்தி மீண்டும் இந்தியாவிற்கு விரைந்திருந்தார்.

இந்த வருகையின் நகர்வில் இந்தியாவின் உச்சபட்ச பாதுகாப்பு அமைப்பான CCI என்ற அமைப்பே மோடி ஒன்றுகூட்டி முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

அதாவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களா கருதப்படும், அந்நாட்டு பிரதமர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார அமைச்சர், இராணுவ உயர் அதிகாரிகள், புலனாய்வாளர்கள், மற்றும் RNAW ஆகிய தரப்பை உள்ளடக்கியதாக இந்த CCI அமைப்பு காணப்படும்.

இந்த அமைப்பின் கலந்துரையாடலின் பின்னரே இந்தியா பாகிஸ்தான் மீதான தனது தாக்குதல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றவுடன் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஆதரவு குரலாக இஸ்ரேலின் குரல் காணப்பட்டது.

இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்

இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்

இஸ்ரேல் இந்தியா

இதன்போது இஸ்ரேல் அரசு இந்தியாவிற்கான உதவிக்கு நாங்கள் நேரடியாக பங்கு கொள்வதாகவும், பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவின் பாதுகாப்பு பிரிவுக்கு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி, இந்திய பிரதமரை தொலைபேசியில் அழைத்து தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியாவிற்கு முழுமையான ஆதரவையும் அவர்  வெளிப்படுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

இந்நிலையில் தாக்குதல்தாரிகள் முதலில் பஹல்காமை தெரிவு செய்வதற்கான காரணம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு அவதானிகள் வெளிப்படுத்திய கருத்துக்கள் சில அதிர்ச்சி நிலைகளை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலுக்கு இலக்கான சுற்றுலா பயணிகள், மற்றும் அங்கு இருந்த விடுதிகளில் தங்கியிருந்தவர்களில் இந்திய புலனாய்வாளர்களைச் சேர்ந்த 7 அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை மையப்படுத்தி முன்னாள் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் வெளிப்படுத்திய கருத்துக்களில், விடுதிகளில் தங்கியிருந்த விருந்தினர்களின் விபரம் அடங்கிய ஆவணம் கசிந்திருக்க கூடும் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு இளம் அதிகாரியும் இதில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் தாக்குதல்தாரிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் விபரங்களை அறிந்தே தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் : எல்லையில் போர்ப் பதற்றம்!

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் : எல்லையில் போர்ப் பதற்றம்!

இராணுவமயமாக்கப்பட்ட பகுதி

பஹல்காம் பகுதி இப்போது உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

பல தசாப்தங்களாக, காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் அல்லது அந்தப் பகுதி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று கோரி வரும் பல உள்நாட்டு போராளிக் குழுக்கள், இந்தியப் பாதுகாப்புப் படைகளுடன் சண்டையிட்டு, வன்முறையில் ஈடுபட்டன.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தக் குழுக்கள் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுவதாக இந்தியா கூறுகிறது, ஆனால் பாகிஸ்தான் அதை மறுக்கிறது. 

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

இந்தியாவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) நடத்திய ஆய்வின்படி, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகரில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பின்னர், 2019 ஆம் ஆண்டு மறைகுறியாக்கப்பட்ட செய்தி செயலியான டெலிகிராம் மூலம் இந்தக் குழு தனது இருப்பை அறிவித்தது.

இந்தியா TRF அதாவது லஸ்கரி தோய்பாவை "பயங்கரவாத அமைப்பு" என்று வகைப்படுத்தியுள்ளது. மற்றும் அதை சட்டவிரோத இஸ்லாமியக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புபடுத்தியுள்ளது.

இது 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தது மற்றும் மிக உயர்ந்த சுயவிவரத்தைக் கொண்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காஷ்மீர் பொலிஸாருடன் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களின் பெயர்களைக் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த அறிவிப்புகளின்படி, மூவரில் இருவர் பாகிஸ்தானியர்கள். அந்த நபர்கள் எவ்வாறு அடையாளம் காணப்பட்டனர் என்பதை இந்தியா கூறவில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுவதற்கு பதிலடியாக இந்தியா தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை தற்போது  நியாயப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய எல்லைக் கடவையை இந்தியா மூடியுள்ளதுடன், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விசாக்களை பாகிஸ்தான் குடிமக்களுக்கு மேலும் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த எதிர்க்கட்சிகளின் ஒப்புதல்

இந்திய பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த எதிர்க்கட்சிகளின் ஒப்புதல்

பாகிஸ்தான் அரசாங்க அறிக்கை

புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து இராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களையும் இந்தியா வெளியேற்றியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

1960 முதல் நடைமுறையில் உள்ள இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கியமான நீர் பகிர்வு ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலும் அதன் பங்கை இந்தியா நிறுத்தி வைத்தது.

மேலும் இது இரண்டு பிளவுபட்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான ஒரு அரிய இராஜதந்திர வெற்றிக் கதையாக  இது கருதப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் வடக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் பிரம்மாண்டமான சிந்து நதி அமைப்பு, திபெத்தில் உருவாகி, சீனா மற்றும் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானை அடைகிறது.

இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய அளவிலான நீர் ஒரு முக்கிய வளமாகும். மேலும் அது எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை இந்த ஒப்பந்தம் நிர்வகிக்கிறது.

பாகிஸ்தானுக்குச் சொந்தமான தண்ணீரைத் தடுக்கவோ அல்லது திருப்பிவிடவோ செய்யும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: எல்லைகளை மூடும் இந்தியா

ஜம்மு காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: எல்லைகளை மூடும் இந்தியா

எல்லையைத் தாண்டுமா இந்தியா

இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதன் வான்வெளியை மூடுவதாகவும், இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாகவும் கூறியது.

இந்தியாவின் நடவடிக்கைகள் "ஒருதலைப்பட்சமானவை, நியாயமற்றவை, அரசியல் ரீதியாக உந்தப்பட்டவை, மிகவும் பொறுப்பற்றவை மற்றும் சட்டப்பூர்வ தகுதியற்றவை" என்று பாகிஸ்தான் கூறியது.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் கசிந்த முக்கிய ஆவணம்! | Leaked Document Before The Pahalgam Attack

"இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடியுள்ளது, பாகிஸ்தானின் தொடர்புக்கு (பஹல்காமில்) ஆதாரம் இருந்தால், அதை எங்களுடனும் உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வாளர்கள் அஞ்சுவதால், இந்தியா  மற்றும் பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதில் இப்போது அனைவரின் பார்வையும் உள்ளது.

பயங்கரவாதக் குழுக்களின் தலைமை அல்லது தலைமையக வசதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நிதியளிப்பதனை அந்நாட்டு அதிகாரிகள் சிலரே உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சர்வதேசத்தின் கேள்வி என்னவென்றால்,  இந்தியா இன்னும் அதிகமாகச் சென்று பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்கும் எல்லையைத் தாண்டுமா? அல்லது அதன் நகர்வு ஜம்மு-காஷ்மீருடன் முடியுமா என்பதே...

0

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US