பொலிஸாரால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்
நீதிமன்ற வழக்கு ஒன்றைக் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நீண்டகாலமாக நீதிமன்ற செய்தியாளராகவும், இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும், தனியார் இணையத்தளமொன்றில் செய்தியாளராகவும் பணியாற்றும் குறித்த நபரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம்
நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார், நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலை கடந்த வாரம் குறித்த பத்திரிகையாளர் தனது இணையத்தளத்தில் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் குளியாப்பிட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது செய்தி சேகரிப்பதற்காக சென்ற அவர், , அங்கு பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கடமையை இடைமறித்து நீதிமன்ற மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை சேவை ஆணையம், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற பொறுப்பான அமைப்புகளிடம் முறைபாடு அளிக்க பத்திரிகையாளர்இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.