ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பொன்சேகா அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை.
ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என கூறுகிறார்கள்.
நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

ஊழல் மிக்க அரசியல்வாதி
இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகளே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.
ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல் மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.

இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam