ஐக்கிய மக்கள் சக்தி முகவரியற்று காணாமல் போய்விடும்! ஐ.தே.க. கூறுகின்றது
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் முகவரியற்று காணாமல்போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் எதிர்ப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கட்சிகள் உருவாகலாம். இலங்கை வரலாற்றில் அவ்வாறு உருவாகியும் உள்ளன. எனினும், அவை நிலைப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கும் இதே கதிதான் ஏற்படும்.
நாட்டின் நலன் கருதி செயற்பட்ட பௌசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதாவது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பு என்பதையே அக்கட்சி இதன்மூலம் கூற விளைகின்றது.
தமது அணி சந்தர்ப்பவாத அரசியலையே நடத்துகின்றது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ஐக்கிய மக்கள் சக்தி
தவிர்த்தது என குறிப்பிட்டார்.
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)