ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது தாக்குதல்(Video)
தெமட்டகொடையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் இன்றைய தினம் (15.02.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்குள் புகுந்துள்ள சிலர், அங்கிருந்த விளம்பரப் பலகைகளைக் கடுமையாகச் சேதப்படுத்தியதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டி அலுவலகங்களை அழிப்பதற்காகக் குழுக்களைக் களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மாளிகையை எரித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.