ஈரான் கப்பல் விவகாரம்: சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் - விஜித ஹேரத்
இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும் என்றும், இதில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாகச் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை என சொல்லப்படும் இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) விதிகளின்படியே இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு
இந்தச் சம்பவத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்றும், மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடல்களின் இதயம் இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம் என்ற தலைப்பிலான அமர்வில் பேசிய அவர், இப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வரவேற்றார் இந்தியாவின் வளங்கள் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இப்பிராந்தியம் பெரும் முன்னேற்றம் அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரான் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரத்தை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே கையாண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற ரய்சினா கலந்துரையாடலில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் இலங்கை எந்தவொரு பக்கமும் சாராது என்றும், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) சட்டகத்திற்குள்ளேயே தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், IORA அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஒரு பெரிய அண்டை நாடாக இந்தியாவிடம் உள்ள மனித வளம் மற்றும் இதர வளங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.