ஐனாதிபதியால் வட்டுவாகல் பாலத்திற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்துவைக்க ஏற்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்வைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வட்டுவாகல் பாலத்தின் நிலப்பகுதி
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எதிர்வரும் 2ஆம் திகதி ஐனாதிபதி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
புதுக்குடியிருப்பில் நடைபெறும் தெங்கு செய்கை தொடர்பான நிகழ்விலும் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான பெயர் பலகை திரைநிக்கம் செய்யும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வட்டுவாகல் பாலம் புனரமைப்புக்கான ஆரம்ப பணிகள் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
வட்டுவாகல் பாலத்தின் நிலப்பகுதி கனிம ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 02 ஆம் திகதி ஐனாதிபதியால் வட்டுவாகல் பாலத்தின் பெயர் பலகை திரைநீக்கம் செய்வதற்கான முன்னாயத்த நிகழ்வில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதுடன், அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
