நீண்ட வாதத்திற்குப் பின் ரணிலுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை சற்று முன்னர் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாதப் பிரதிவாதங்கள்
சீரற்ற உடல்நிலை காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையானார்.

இதற்கடுத்த, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதப் பிரதிவாதங்களைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கைகளை கருத்திற் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan