கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல்
புதிய இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது போத்தலைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் வீதித் தடைகளை தாண்டி முன்செல்ல முற்பட்டதாகவும், பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமை கட்டுப்படுத்தும் நோக்கில், களத்திற்கு நீர்த்தாரைப் பிரயோக வண்டிகள் கொண்டு வரப்பட்டன.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலையாவாரா..
இந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றிய பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும், பெருமளவான சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்படும், மேலும் அவர்களின் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் தொடர்பில் கடும் சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 5 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருவதாகவும், இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
