மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூலை 28 முதல் 30 வரை மாலைதீவுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்வுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
60வது ஆண்டு நிறைவு
இலங்கையும் மாலைதீவும் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த அரசுமுறை வருகையும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஒரு வணிக மன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும், இலங்கையின் வெளிநாட்டு சமூக உறுப்பினர்களைச் சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
