பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து புதிய நடவடிக்கை.. ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற 160ஆவது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், அவசியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புகளுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பொலிஸார் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.
அறிமுகப்படுத்தப்பட்ட செயலி
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைச் சமூகப் பொறுப்பாகக் கருதிச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவான போதைப்பொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையும், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் அவர் பாராட்டினார்.
நாட்டை
குற்றங்களின் ராஜ்யத்திலிருந்து அமைதியான நாடாக மாற்றத் தேவையான சட்டங்களை
இயற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்குச் சேவைகளை விரைவாக வழங்குவதற்காக 'SRI LANKA POLICE MOBILE
APP' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட www.police.lk




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20