யாழில் மாபெரும் போராட்டம்! பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்க்கும் மக்கள்
“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை(28.02.2026) இடம்பெறவுள்ள நிலையில்,அன்றைய தினம் காலை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது.
மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு
அங்கிருந்து பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(25.02.2026) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் இந்த போராட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டனர்.
இதன்போது, கட்சி பேதங்களைக் கடந்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்த போராட்டத்தில் கைகோர்க்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
பயங்கரவாதச் சட்டம் தேவையற்றது..
ஊடகச் சந்திப்பில் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதற்கு மாற்றாகப் புதியதொரு சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது.
எம்மைப் பொறுத்தவரை இந்த சட்டம் பழையதோ அல்லது புதியதோ, அதன் வடிவம் எதுவாக இருந்தாலும் அது தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இத்தகைய கொடிய சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசின் புதிய சட்ட முயற்சியைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan