நல்லகண்ணின் புகழுடலுக்கு சிறீதரன் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணின் புகழுடலுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நல்லகண்ணு (வயது 101) உடல்நலக் குறைவால் நேற்று(25.02.2026) காலமானார்.
சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்கு
எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார்.

அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2016ஆம் ஆண்டிலேயே தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானம் செய்ய ஒப்புதல் கடிதம் அளித்திருந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது புகழுடல் முறைப்படி தானமாக வழங்கப்பட உள்ளது.

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri