ஒருகோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை : முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்வரும் ஒரு வருடகாலத்தினுள் ஒரு கோடி ரூபா அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது, கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் காணி நிரப்புதல் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம் இருந்து 6.4 மில்லியன் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட விசாரணையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்போது பிரசன்ன ரணதுங்க குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதமும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் அந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரசன்ன ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
அதன் போது அவரது மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதுடன், 2027 ஜூலை 6ஆம் திகதிக்கு முன்னர் அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது
நீதிமன்றம் உத்தரவிட்ட இத்தொகையைச் செலுத்தத் தவறினால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக பிரதிவாதிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், உரிய இழப்பீட்டுத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திவிடுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.
இந்த வாக்குறுதியைக் கருத்தில் கொண்டு, பிரதிவாதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
you may like this video