இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.
மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு
இந்தியாவின் புதிய கல்வி அமைச்சர்
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள் நடத்திய தீவிரமான போராட்டங்களின் அழுத்தத்தாலேயே இந்த திடீர் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களின் தொடர் எதிர்ப்பால், 36 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.
தற்போது உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுடன் சேர்த்து கல்வித் துறையையும் இவர் கவனித்துக் கொள்கிறார்.
பரீட்சை முகமைகளின் செயல்பாடுகளைச் சீரமைப்பது, கசிவு விவகாரங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு முன் இளைஞர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது ஆகியவையே புதிய கல்வி அமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri