தமிழ் - முஸ்லிம் பேரவையின் கூட்டணியின் பிரதிநிதியாக பெயரிடப்பட்டுள்ள இராதாகிருஷ்ணன்
தமிழ் - முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நேற்று(25.07.2025) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் கூட்டணியின் பிரதிநிதியாக, அதன் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத் அருள்சாமியும் இந்தப் ப்பேரவையில் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இராதாகிருஷ்ணன் எம்.பி.க்குத் துணையாகச் செயற்படுவார் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[BGUOTJ1
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam