சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் எமது அரசாங்கம் தண்டனைகளை வழங்கி வருகிறது - சுந்தரலிங்கம் பிரதீப்
சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(08.08.2026) முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்ட திருத்தங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பாரம்பரிய குடும்ப அரசியலுக்குப் பதிலாக, எளிய பின்னணியில் இருந்து வந்தவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஆடம்பர வாகனப் பவனிகள், தேவையற்ற பாதுகாப்பு மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து எளிமையான அரசாங்கத்தை எமது அரசாங்கம் நடத்தி வருகிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கண்டாவளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் உரிய சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam