விடுதலைப்புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி - மகள் துவாரகா தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை (Video)
விடுதலைப்புலிகளின் தலைவர் மேற்குலகில் இருக்கும் அவரது சொந்த உறவுகளை நம்பாமல் இவர்களை நம்புவதாக கூறுவது மிகவும் வேடிக்கையான விடயம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
பிரபாகரனின் மனைவியின் சொந்த சகோதரி டென்மார்க்கில் இருக்கிறார். தலைவர் பிரபாகரனின் சொந்த சகோதரன் டென்மார்க்கிலும், தமைக்கையார் கனடாவிலும் இருக்கிறார்கள்.
அவர்கள் யாருடனும் தொடர்புகொள்ளாமல் இவர்களுடன் தொடர்புகொண்டதாக சொல்வது எவ்வளவு வேடிக்கையான விடயமாக உள்ளது.
உடன் பிறந்த உறவுகளை நம்பாமல் இவர்களை நம்புவது என்று சொல்வது எவ்வளவு வேடிக்கையான விடயம் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உரையாடியதாக சொல்லப்பட்ட விடயங்களை ஆராய்ந்த போது, அவர்கள் அதாவது உரையாடியவர்கள் யார் என்றே தெரியாத அளவிற்கு முகத்தை மறைத்து அடையாளம் காண இயலாத அளவிற்கு தான் செயற்பட்டிருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை இது வெறும் நிதி வசூலிப்புக்கான முயற்சியாக தான் நான் பார்க்கிறேன்.
இவ்வாறான பொய்யான பிரச்சாரங்களை வெளியிடுவதால் தாயக மக்களிடையே ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.
அதாவது இது இந்தியாவின் உளவுத்துறை செய்திருக்கலாம் அல்லது வேறு உளவு நிறுவனங்கள் செய்திருக்கலாம் அவர்களுடைய பின்னணியில் இவர்கள் இயங்குகிறார்கள் என்ற கருத்துக்கள் வர தொடங்கிவிட்டன.
ஆகவே இது மறைமுகமான எதிர்விளைவை தான் இந்திய அரசுக்கு தரும். இத்தகைய விளைவுகளை ஊகிக்காமல் இந்திய அரசு இதில் பங்குபற்றும் என்று சொல்வது ஏற்புடையதல்ல.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசு சார்ந்தோ அல்லது இந்திய பாதுகாப்பு துறை சார்ந்தவர்கள் கருத்து வெளியிட்டால் தான் நாம் அதை பற்றி பேச முடியும்.இல்லையெனில் நாங்கள் இவ்வாறு ஊகங்களை தான் சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
