மாகாண செலவினங்கள் தொடர்பில் ஆளுனர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்: வெளியான அறிவிப்பு
மாகாண சபைகளின் செலவினங்கள் முகாமைத்துவம் தொடர்பில் ஆளுனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மாகாண சபைகள் செயற்படாத நிலையில், அவற்றின் செலவினங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல் எழுந்துள்ளது.
இதனையடுத்து மாகாண சபைகளின் நிர்வாகம் மட்டுமன்றி செலவினங்கள் தொடர்பான அதிகாரமும் ஜனாதிபதியின் மூலம் மாகாண ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
முக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள்
தத்தமது மாகாணங்களின் நாடாளுமன்ற உ றுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்வதும், மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளை இனம் காண்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பொறுப்புகளாகும்.
தற்போதைய நெருக்கடி நிலையில் பொதுமக்களின் தேவைகளையப் பூர்த்தி செய்வதில் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
சீன கப்பல் விவகாரம்! துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - வெளிச்சத்திற்கு வந்த தகவல் |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
