பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மகிந்தானந்த வெளியிட்ட தகவல்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நியமிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான சேவை
மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு உறுப்பினர்கள் ஏற்கனவே களமிறங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
